பிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி!

பதிவர் : சிகரம் on 2017-08-21 01:30:05

ஸ்டார் விஜய் தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐம்பது நாட்களைத் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது. எட்டாவது வாரத்தின் முடிவில் நடன இயக்குனர் காயத்ரி வெளியேற்றப்பட்டார். ஏழாவது வாரம் காயத்ரி வெளியேற்றத்திற்கான போட்டியில் இருந்திருந்தாலும் பிக்பாஸ் இனால் காப்பாற்றப்பட்டார். ஆனால் இந்த வாரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி வெளியேறினார். இந்த வாரம் ரைசாவும் காயத்ரியுமே வெளியேற்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்டனர்.



பிக்பாஸ் இல்லத்தினுள் நிகழ்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு காயத்ரி காரணமாக இருந்தார் என்று ரசிகர்கள் எண்ணினர். ஆகவே தங்கள் "வாக்குப் பலத்தின்" மூலம் காயத்ரியை வெளியேறியுள்ளனர் ரசிகர்கள். காயத்ரி வெளியே வந்ததும் அவரிடம் நேரடியாகக் கேள்வி கேட்கும் வாய்ப்பை கமல் நிகழ்ச்சியைக் காண வந்திருந்த ரசிகர்களுக்கு வழங்கினார். ரசிகர்கள் தங்கள் மனதில் உள்ள கேள்விகளை கேட்டு உரிய பதில்களைப் பெற்றுக் கொண்டனர்.

பல்வேறு கெட்ட வார்த்தைகள் பேசியது, மற்றவர்களை மதிக்காது தான் என்ற அகந்தையுடன் நடந்து கொண்டது, ஓவியாவை பாட்டுப் பாடி தூங்க விடாமல் செய்தது, மற்றவர்களை பிரச்சினைகளில் தூண்டி விட்டது,  அதிகாரத்தை நிலை நாட்ட முற்பட்டது, சக போட்டியாளர் பரணியின் விடயத்தில் மனிதத் தன்மையற்று நடந்து கொண்டது மற்றும் பொய் பேசுவது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் முன்வைத்திருந்தனர். ஆகவே அவர் மீது கோபம் அடைந்திருந்தனர்.

எனவே அவரை வெளியேற்றும் தருணத்திற்காய் காத்திருந்தனர். ஆனால் சக போட்டியாளர்களால் ஆறு வாரங்கள் தொடர்ந்து வெளியேற்றத்திற்காக பரிந்துரைக்கப் படாமல் இருந்த காயத்ரி இறுதி இரண்டு வாரங்களாக பரிந்துரைக்குள்ளாகி இப்போது நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். 

தொடரும் வாரங்களில் புது வரவுகளும் வெளியேற்றங்களும் இருக்கும். அவை நிகழ்ச்சியை சுவாரசியமாக்குமா? ஓவியாவின் இடை வெளியை பிக்பாஸ் சக போட்டியாளர்கள் நிரப்புவார்களா? நிகழ்ச்சி மீண்டும் சூடு பிடிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்!




குறிச்சொற்கள்: #பிக்பாஸ்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create Account



Log In Your Account