சிகரம்

அறம் செழிக்க வாழ்வோம்!

பதிவர் : கவின்மொழிவர்மன் on 2018-04-04 00:36:04

ஆறுகள், குளங்கள் அமைத்திட்டே 

நீர்வளம் மிகுந்தே பெருக்கிடுவோம்!

ஆழ்துளை கிணறுகள் அகற்றிட்டே 

நிலத்தடிநீரை உயர்த்திடுவோம்!


வீடுகள்தோறும் மரம் வளர்ப்போம்

இயற்கை வளத்தை பெருக்கிடுவோம்!

உரங்கள், மருந்துகள் தவிர்த்திடுவோம்

மண்ணின் வளத்தினை காத்திடுவோம்!
பாரம்பரிய தானியங்கள் வளர்த்திடுவோம்

ஆரோக்கியமான சந்ததி கொடுத்திடுவோம்!

இயற்கை மருந்துகள் எடுத்திடுவோம்

எதிர்வினை உடலில் தவிர்த்திடுவோம்!


லஞ்சம், ஊழல் தவிர்த்திடுவோம்-நல்லாட்சி 

நாட்டில் அமைத்திடுவோம்!

வரி, விலை நாட்டில் குறைத்திடுவோம்

வறுமை என்பதை தவிர்த்திடுவோம்!


ஆயுத அரசியல் தவிர்த்திடுவோம்-அறத்தினை 

தழுவியே வாழ்ந்திடுவோம்!

பாவையர் உரிமையை உயர்த்திடுவோம்

பாரினில் பெண்மையை புகழ்ந்திடுவோம்!


ஜாதிமதப் பிரிவினை அழித்திடுவோம்

சமத்துவம் போற்றி வாழ்ந்திடுவோம்!

வஞ்சகம் குரோதம் தவிர்த்திடுவோம்

அறத்தினை செழிக்க வாழ்ந்திடுவோம்!


-கவின்மொழிவர்மன்

 

#088/2018/SIGARAMCO

2018/04/04

அறம் செழிக்க வாழ்வோம்! 

பதிவர் : கவின்மொழிவர்மன்
#சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO 

#TAMIL #POEM #இயற்கை #NATURE #LIFE
#சிகரம்

குறிச்சொற்கள்: #சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM #இயற்கை #NATURE #LIFE #சிகரம்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account