பாமர தமிழ்!

பதிவர் : கவின்மொழிவர்மன் on 2017-07-09 00:18:45

தேமதுர தமிழே!
தெளிந்தநல் அமிழ்தே!
மானுறு விழியே!
மாதவ மொழியே!

வானுறு மதியே!
வாசுகி பதியே!
பாரத கலையே!
பாரதி மொழியே!

கானுறு மலரே!
காவிய தமிழே!
தேனூறு கனியே!
தேவரின் அமிழ்தே!

வேலவன் மயிலே!
மாலவன் மலரே!
கலைகளில் முதலே!
அலைகளில் நீர்திவளே!

கம்பனின் கவியே!
கண்ணகியின் சிலம்பே!
மாமதுரை தமிழே!
மாதவியின் எழிழே!

பொதிகையின் குளிரே!
பொன்னியின் வடிவே!
கங்கையின் புனிதமே!
மங்கையின் நாணமே!

முல்லையின் வாசமே!
கிள்ளையின் பாசமே!
அன்னையின் நேசமே!
எந்தையின் சுவாசமே!

சிந்தையின் வண்ணமே!
விந்தையில் விந்தையே!
செழித்தநல் தெங்கையே!
வடிவழகு மங்கையே!

சிப்பியில் முத்தே!
சிந்தனை வித்தே!
கார்கால முகிழே!
மாரிகால மழையே!

பசுந்தளிர் பயிரே!
பசித்தவன் உயிரே!
புசிப்பவன் சுவையே!
புலவனின் கவியே!

இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும்.

குறிச்சொற்கள்: #தமிழ்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Aadharsh

2017-08-23 04:24:57
அழகான வரிகள் சோழா...

Aadharsh

2017-08-23 04:10:05
அழகான வரிகள் சோழா....

K Balaji

2017-08-06 13:07:14
அருமையான படைப்பு! வாழ்த்துக்கள் !

Create AccountLog In Your Account